Thursday, January 14, 2010

Tamil Kavithai... Thoothu

தூதனுப்ப தயாரானேன்... எதை அனுப்பலாம்??
நிலவை தூதனுப்ப மனமில்லை...
மனிதர்கள் காலேடி பட்டு நிலவோடு என் காதலும் கசங்கி விடும் என்பதால்.

காற்றை தூதனுப்ப மனமில்லை....
காற்றோடு சேர்ந்து என் காதலும் மாசுபட்டு விடும் என்பதால்.

 மேகத்தை தூதனுப்ப மனமில்லை ...
ஏவுகணை விட்டு என் உள்ளத்தை கிழித்து விடுவார்கள் என்பதால்

நீரை தூதனுப்ப மனமில்லை.....
அணைகள் கட்டி நீரோடு என் காதலையும் அடக்கி விடுவார்கள் என்பதால்.

 புறாவை தூதனுப்ப மனமில்லை.... மனிதர்கள் கையில் சிக்கி என் காதல் தவித்து விடும் என்பதால்.

அறிவியல் வலுதுவிட்ட காலத்தில் ... என் மெய்யான காதலுக்கு தூதனுப்ப வழி இல்லாமல் தவிக்கிறேன் நான் !!!

1 comments:

Srini said...

nice one.. :) :) check out my blog at imaiyavanmaithunan.blogspot.com

Post a Comment